லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2021 11:29 PM IST (Updated: 7 Nov 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி, 
சிவகாசி உட்கோட்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள் போலியாக தயார் செய்யப்பட்டு ஏழை தொழிலாளர்களிடம் பணம் பறிக்கும் செயல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து வந்த புகாரை தொடர்ந்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் தனிப்படை அமைத்து லாட்டரி விற்பனையை தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவகாசி பஜார் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையின் அருகில் சரவணன் (வயது 41), காண்டீபன் (52) ஆகியோர் கேரள மாநில லாட்டரி சீட்டு என தாளில் எழுதி கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.23,440 பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பழனிக்குமார் என்பவரை தேடி வருகிறார்கள்.

Next Story