போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கம்
கல்வீச்சு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலூர்,
தமிழக அரசு வன்னியர்களுக்கு ஒதுக்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன்படி இது வரை 29 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையொட்டி கிராமப்புறங்களுக்கு இரவு நேரத்தில் செல்லும் அரசு பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அச்சமின்றி அரசு பஸ்களில் பயணம் செய்யவும், அரசு பஸ்களை சேதப்படுத்துவதை தடுக்கவும் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதாவது, பஸ்களில் பயணம் செய்தும், மோட்டார் சைக்கிளில் சென்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story