இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்துசெல்லும் அவலம்
பூண்டி பெரியார்நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம் உள்ளது. எனவே சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெலட்டூர்:
பூண்டி பெரியார்நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம் உள்ளது. எனவே சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊராட்சியில் உள்ள
பெரியார் நகர் கிராமத்தில் நேற்று ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். பூண்டி பெரியார் நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இறந்தவர் உடலை கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் வயல்வெளி வழியாக சேறும், சகதியுமாக உள்ள மண்பாதையில் எடுத்து சென்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயல் வழியே செல்லும் அவலம்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பூண்டி கீழத்தெரு பெரியார்நகர் கிராமத்திற்கு பல ஆண்டுகளாக மயான சாலை வசதி இல்லை. கிராமத்தில் ஒருவர் இறந்தால் வயல்வெளி வழியே சேறும் சகதியுமாக உள்ள மண்பாதையில் தான் அவரது உடலை கொண்டு செல்லும் அவலம் உள்ளது. எனவே பூண்டி பெரியார் நகர் மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story