பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்ல பயணிகள் அலைமோதினர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அளிக்கப்பட்ட தொடர் விடுமுறையினால் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள், விடுதியில் தங்கியிருந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் திறக்கப்படுவதால், சொந்த ஊர் சென்றிருந்தவர்கள் நேற்று ஊருக்கு திரும்பினர். இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story