வாலிபரை தாக்கி பணம், செல்போன்கள் பறித்த 5 பேர் கைது


வாலிபரை தாக்கி பணம், செல்போன்கள் பறித்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2021 2:08 AM IST (Updated: 8 Nov 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கி பணம், 2 செல்போன்கள் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்

திருச்சி
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, கீழகடம்பூர் காமராஜர் வீதியை சேர்ந்த சகாதேவனின் மகன் பாலவிநாயகம் (வயது 21). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், கடந்த 5-ந் தேதி தனது காதலியை பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணி அளவில் தனது காதலியுடன் திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் அருகே உள்ள டைகர் பூங்கா முன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பால விநாயகத்தை கத்தியால் முகத்தில் தாக்கி, அவரிடம் இருந்த ரூ.850 மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கே.எம்.சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பாலவிநாயகத்தை தாக்கி செல்போனை பறித்துச்சென்றது, திருச்சி புத்தூர் திரு.வி.க.நகரை சோ்ந்த சேட்டு மகன் ஜாகீர்உசேன் (26), மோகன்தாஸ் மகன் சிவக்குமார் என்ற சிவசங்கர் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 15, 16, 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் ஜாகீர்உசேன், சிவக்குமார் என்ற சிவசங்கர் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story