பாவூர்சத்திரத்தில் நெல்லை-சென்னை சிறப்பு ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு தினசரி இயக்க வலியுறுத்தல்
நெல்லை-சென்னை சிறப்பு ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி, நெல்லையில் இருந்து நேற்று மாலையில் சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலானது அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக சென்னைக்கு சென்றது.
இந்த சிறப்பு ரெயிலில் ஏராளமான பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். இந்த சிறப்பு ரெயிலுக்கு பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும், ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, மரக்கன்றுகள், புத்தகம் வழங்கியும் வரவேற்றனர்.
தினசரி இயக்க வலியுறுத்தல்
இந்த சிறப்பு ரெயிலை சென்னை-நெல்லை இடையே இருமார்க்கத்திலும் தினசரி இயக்கினால் தென்காசி மாவட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
எனவே சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story