நெல்லையில் அதிக மாத்திரைகளை தின்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


நெல்லையில் அதிக மாத்திரைகளை தின்ற  பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 8 Nov 2021 3:16 AM IST (Updated: 8 Nov 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

அதிக மாத்திரைகளை தின்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நெல்லை:
நெல்லையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் நேற்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்றதால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயர் அதிகாரியின் பணி நெருக்கடி மற்றும் கடுமையான நடவடிக்கையால் மன உளைச்சல் ஏற்பட்டு, அந்த இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story