தொடர்மழை எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் கண்காணிப்பு


தொடர்மழை எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 5:16 PM IST (Updated: 8 Nov 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்மழையால் பூங்காவில் உள்ள விலங்குகளின் உடல் நிலையை 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். விலங்குகளின் பாதுகாப்பு உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பூங்காவில் மழை வெள்ளம் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும், மரங்கள் முறிந்து விழுந்தால் அதனை அகற்றுவதற்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story