திருவள்ளூர் நகராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி


திருவள்ளூர் நகராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 8 Nov 2021 6:34 PM IST (Updated: 8 Nov 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பெரியகுப்பம், வள்ளலார் தெருவில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தமிழக அரசு உத்தரவின்படி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி சிரமமில்லாமல் போட்டுக்கொள்ளும் வகையில் வீடு வீடாக சென்று ஊசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பெரியகுப்பம், வள்ளலார் தெருவில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 

இதில் திரளான பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர் வீணா, சுகாதார, ஆய்வாளர் சுதர்சன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story