பொன்னேரி அருகே நிரம்பி வழியும் லட்சுமிபுரம் அணைக்கட்டு
பொன்னேரி அருகே லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வளத் துறையின் ஆரணி ஆறு உப நில வடிநிலக் கோட்டம் உதவி செயற்பொறியாளர் பராமரிப்பில் ஆரணி ஆறு உள்ளது. ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் கரைகள் புனரமைத்தல் நீர்வளத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆரணி ஆறு வடிநில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வந்தது தமிழகத்தில் 66 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ஆறு மழை நீரால் நிரம்பி பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தின் வழியாக செல்லும் இடத்தில் உள்ள அணைக்கட்டுக்கு மழை நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 7 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேறுகிறது. வெளியேறும் இந்த தண்ணீர் ரெட்டிபாளையம் தடுப்பணைக்கு சென்று அங்கிருந்து ஆண்டார்மடம் அருகே கட்டி வருகிற தடுப்பணை நிரம்பி பழவேற்காடு ஏரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் மூழ்கின
இந்தநிலையில் ஆரணி ஆற்றின் நீர்வள திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நெல் நடவு பணி முடிந்து ஒரு மாத காலத்திற்கு மேல் நெற்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
ஆலாடு, ரெட்டிபாளையம், மனோபுரம், பெரும்பேடு, மடிமைகண்டிகை, ஆசானபூதூர், காணியம்பாக்கம், வேளூர், காட்டூர், தத்தைமஞ்சி, கடப்பாக்கம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் நடவு செய்த நெற்பயிர்கள் பெருத்த சேதம் அடைந்து நிலையே உருவாகும் சூழ்நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story