தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 8 Nov 2021 7:35 PM IST (Updated: 8 Nov 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 18 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்ததாக, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்த பாபுகண்ணன் (29), ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த நட்டார்முத்து (49), மடத்தூரை சேர்ந்த ராஜூ என்ற ராஜ்குமார் (25), பசும்பொன்நகரை சேர்ந்த கண்ணாயிரம் (31), முத்தையாபுரம் ராஜீவ்நகரை சேர்ந்த மாரிசெல்வம் (23), தாளமுத்துநகரை சேர்ந்த அகஸ்டின் (70), சுனாமிகாலனியை சேர்ந்த முகமது நில்பர் (21), நேரு நகரை சேர்ந்த மரியான் (40), புதுக்கோட்டை பொன்ராஜ் நகரை சேர்ந்த கணேசன் (44), தூத்துக்குடி ஆசீர்வாதநகரை சேர்ந்த சதாம் உசேன் (27), திருச்செந்தூர் குமார பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மணி (56), ஆறுமுகநேரி சுப்பிரணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் (54), ஆத்தூர் தலைப்பண்ணையை சேர்ந்த மாரிசெல்வம் (24), கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த முத்தீஷ் (19), மாடசாமி நகரை சேர்ந்த கார்த்திக் (21), வீரவாஞ்சிநகரை சேர்ந்த அன்பரசு (21), சக்திமணி, மெஞ்ஞானபுரம் சத்யாநகரை சேர்ந்த முருகன் (40) ஆகிய 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 770 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 430 ரொக்கப்பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story