2-ம் போக சாகுபடிக்காக நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகள்


2-ம் போக சாகுபடிக்காக நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Nov 2021 8:32 PM IST (Updated: 8 Nov 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் 2-ம் போக சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


கம்பம்:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை ஆண்டு தோறும் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு முதல்போக சாகுபடி தொடங்கி அறுவடை பணிகள் முடிந்து விட்டன. இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் 2-ம் போக சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். மேலும் கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, மஞ்சள்குளம், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், அண்ணாபுரம் பகுதியில் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதில் சில விவசாயிகள் எந்திர நடவிற்காக பாய் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு கூறுகையில், பாய் நாற்றங்கால் அமைப்பதால் 50 சதவீதத்துக்கும் அதிகமாக விதை நெல்லை சேமிக்கலாம், தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்கலாம். இது தொடர்பான சந்தேகங்களுக்கு கம்பம் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.


Next Story