குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது
கூத்தாநல்லூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
சம்பா தாளடி பணிகள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் குறுவை அறுவடை பணிகளும், சம்பா தாளடி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வடபாதிமங்கலம் புனவாசல் தெருவில் குடியிருப்பு பகுதிகளையொட்டி குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் மழை தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் இல்லாமல் இருந்தது.
குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது
தற்போது பெய்து தொடர் மழையால் குட்டை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. புனவாசலில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர். மேலும் அங்குள்ள கோட்டைகாளியம்மன் கோவிலை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. கூத்தாநல்லூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story