நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 684 வாக்குச்சாவடிகள் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 684 வாக்குச்சாவடிகள் கலெக்டர் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 684 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
684 வாக்குச்சாவடிகள்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு கடந்த 1-ந் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு உள்ள தமிழ்நாடு சட்டமன்ற ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாமக்கல் நகராட்சியில் 108 வாக்குச்சாவடிகளும், குமாரபாளையம் நகராட்சியில் 70 வாக்குச்சாவடிகளும், ராசிபுரம் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு நகராட்சியில் 88 வாக்குச்சாவடிகளும் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5 நகராட்சிகளில் 360 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலாம்பாளையம், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூர், பொத்தனூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், வெங்கரை மற்றும் வெண்ணந்தூர் உள்ளிட்ட 19 பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 684 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 684 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலானது நேற்று முன்தினம் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story