பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விவசாயி கைது


பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விவசாயி கைது
x
தினத்தந்தி 8 Nov 2021 9:23 PM IST (Updated: 8 Nov 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகதராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகதராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய தம்பி சின்ன கிருஷ்ணன். விவசாயிகள். அண்ணன், தம்பிக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று சின்னகிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 
இதனால் அவர் தனது அண்ணன் மனைவி கண்ணம்மாவை (வயது55) திட்டி உள்ளார். இதனை அவரது மகன் முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சின்ன கிருஷ்ணன் அரிவாளால் கண்ணம்மாவை வெட்டினார். 
விவசாயி கைது
இதில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. இந்த மோதலில் சின்ன கிருஷ்ணனின் மகன் விக்னேசுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன கிருஷ்ணனை கைது செய்தனர். 
மேலும் கண்ணம்மாள், முனியப்பன், விக்னேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story