கிறிஸ்தவ அமைப்பினர் கலெக்டரிடம் மனு


கிறிஸ்தவ அமைப்பினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Nov 2021 9:30 PM IST (Updated: 8 Nov 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ அமைப்பினர் கலெக்டரிடம் மனு

திருப்பூர், 
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் மனு கொடுத்து முறையிட்டனர். அந்த வகையில் கிறிஸ்தவ அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் அந்தோணி, அவரது மனைவி அற்புதமேரி ஆகியோர் ஊத்துக்குளி தாலுகா சர்க்கார் பெரியபாளையத்தில் 9.5 சென்ட் அளவுள்ள நிலத்தை வாங்கி அங்கு ஜெபவீடு கட்ட ஏற்பாடு செய்தனர். மேலும் அந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சுவர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கு ஜெபவீடு கட்டக்கூடாது என்று கூறியதுடன் மிரட்டல் விடுத்தனர். ஜெபவீடு அமைக்க காவல்துறையும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெபவீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக சிறுபான்மை நலத்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story