பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்ற கரூர் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலரின் கணவர் கைது
பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்ற கரூர் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
அதிகாரிகள் சோதனை
கரூர்-சேலம் மதுரை பைபாஸ் சாலையில் மண்மங்கலம் பஸ் நிலையம் அருகே பேக்கரி நடத்தி வருபவர் மனோகரன் (வயது 46). இவர் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளர் ஆவார். இந்நிலையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் தலைமையிலான அதிகாரிகள் மனோகரனுக்கு சொந்தமான பேக்கரி கடையில் திடீர் சோதனை செய்தனர்.
அதிரடி கைது
அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 90 பாக்கெட்டுகளில் இருந்த 8 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்றதாக மனோகரனை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனோகரனின் மனைவி அலமேலு கரூர் 2-வது வார்டு அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கரூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story