கரூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Nov 2021 10:12 PM IST (Updated: 8 Nov 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

கரூர்
கரூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கம் சார்பில் மருத்துவத்துறையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்க தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில் 24 மணி நேரமும் பணிபுரிந்த மருந்து கிடங்கு அலுவலர்கள், தலைமை மருந்தாளுனர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் அனைவருக்கும் ஊக்க தொகை மறுக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுவது என மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கத்தை சேர்ந்த மருந்தாளுநர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். வருகிற 10-ந்தேதி வரை இவர்கள் தொடர்ந்து இதேபோல் கருப்பு பட்டை அணிந்தே பணியாற்றுவது என முடிவு செய்துள்ளனர்.

Next Story