நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 Nov 2021 12:02 AM IST (Updated: 9 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 120 வார்டுகள் மற்றும் நாட்டறம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வார்டுகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 700, மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் 1400 பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் பழுதுபார்க்கும் பணிகள் நேற்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் பள்ளியில் நடந்தது. 

கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கபட்டதால் விரைவில் நகர்புற தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

Next Story