வாணியம்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு


வாணியம்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:02 AM IST (Updated: 9 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகளை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே ரசாயன கழிவுகளை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரசாயன கழிவுகள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட கொய்யான்கொல்லை கிராமம் உள்ளது. ஆந்திர மாநிலம், குப்பம் செல்லும் வழியில் உள்ள இந்த கிராம பகுதியில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை, கொள்ளு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.

இந்த விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தில் ரசாயன கழிவுகள், தோல்கழிவுகள், ஆட்டு முடிகள் மற்றும் அகர்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றபடும் ரசாயன தூள்கள் என அனைத்தையும் மர்மநபர்கள் லாரி, லாரியாக கொண்டுவந்து ஆங்காங்கே மூட்டை, மூட்டைகளாக திறந்த வெளியில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். 

நீர்நிலைகள் பாதிப்பு

தற்போது பெய்து வரும் மழையினால் கழிவுகளிலிருந்து ரசாயனம் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் கலப்பதால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதி வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ளது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் இதுபோன்று திறந்த வெளிகளில் கொட்டப்பட்டு, நீரின் தன்மை மாறுவதுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story