திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 9-வது நாளாக ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை  தொழிலாளர்கள் 9-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2021 12:02 AM IST (Updated: 9 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 9-வது நாளாக ஆர்ப்பாட்டம்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு இந்த ஆண்டுக்கான கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அன்பழகன் தலைமையில், செயலாளர் கோபி, இணை பொறுப்பாளர்கள் யுவராஜ், சீனிவாசன் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 9-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டுக்கான கரும்பு அரவையை தொடங்க தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய 6 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story