ராமேசுவரம் மீனவர்களுக்கு தடை


ராமேசுவரம் மீனவர்களுக்கு தடை
x
தினத்தந்தி 9 Nov 2021 12:16 AM IST (Updated: 9 Nov 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

வங்கக்கடலில் புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரையிலும் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் தான் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் தற்போது மீண்டும் புயல் சின்னம் காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் விசைப்படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்று 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 300-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் நங்கூரமிட்டு கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் தனுஷ்கோடி உள்ளிட்ட ஊர்களிலும் 500-க்கும் அதிகமான நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.


Next Story