கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை திருட்டு


கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:43 AM IST (Updated: 9 Nov 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை திருடப்பட்டது.

நெல்லை:

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் அங்கம்மாள் (வயது 30). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக, மணிக்கூண்டில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் கொக்கிரகுளத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கம்மாள் கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது தனது கழுத்தை பார்த்தார். 

அப்போது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அங்கம்மாள் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story