தென்காசி கலெக்டர் அலுவகம் முன்பு தாய்-மகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


தென்காசி கலெக்டர் அலுவகம் முன்பு தாய்-மகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:52 AM IST (Updated: 9 Nov 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு தாய்-மகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி:
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலங்குளம் தாலுகா நல்லூர் காசியாபுரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜன் என்பவர், தனது சொத்தை அபகரிப்பு செய்துவிட்டதாக புகார் மனு கொடுத்தார். அப்போது அவரது தாயார் அமுதா, தங்கை ரம்யா ஆகியோர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன், விதவை உதவித்தொகை உள்ளிட்ட 248 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story