இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் அவலம்
பூதலூர் அருகே பொன்விளைந்தான்பட்டியில் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் நிலை உள்ளதால் சிறிய பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அருகே பொன்விளைந்தான்பட்டியில் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்லும் நிலை உள்ளதால் சிறிய பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயானம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் சோளகம்பட்டி ஊராட்சியில் பொன்விளைந்தான்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் வழியில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் வரும் காலங்களில் இறந்தவர்களின் உடலை வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் சிறு பாலம் கட்டித்தர பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை பயனில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.
சிறிய பாலம்
வாய்க்காலில் தண்ணீர் வரும் போது இறந்தவர்களின் உடலை சிரமப்பட்டு வாய்க்காலில் இறங்கி எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொன்விளைந்தான்பட்டி மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் சிறு பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story