கர்நாடகத்தில் 123 தொகுதிகளில் வெற்றி பெற சபதம் - குமாரசாமி சூளுரை
கர்நாடகத்தில் 123 தொகுதிகளில் வெற்றி பெற சபதம் எடுத்துள்ளோம் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
கொள்கை-கோட்பாடுகள்
ஜனதா தளம் (எஸ்) சார்பில் ஜனதா பத்திரிகை வெளியீட்டு நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்து கொண்டு, அந்த பத்திரிகையை வெளியிட்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பேசியதாவது:-
சமூகத்தில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நாங்கள் இந்த ஜனதா பத்திரிகையை தொடங்கியுள்ளோம். மாநிலம், தேசியம், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்கள் குறித்த விஷயங்கள் பத்திரிகையில் இடம் பெறும். பிற மாநிலங்களில் கட்சிகள் தங்களின் கொள்கை-கோட்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு பத்திரிகைகளை நடத்துகின்றன. ஆனால் ஜனதா பத்திரிகை எங்கள் கட்சியின் பத்திரிகை அல்ல.
பொதுத்தேர்தல் நடக்கும்
மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் சபதம் எடுத்துள்ளோம். இடைத்தேர்தல்கள் நடைபெறும் விதம் வேறு. பொதுத்தேர்தல் நடக்கும் விதமே வேறு.
அதனால் 123 தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கத்துடன் கட்சியினர் அனைவரும் உழைக்க வேண்டும். நமது தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story