புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் 5 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 23 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 42 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 321 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 661 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 1,056 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story