மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது
மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 40 வயது தொழிலாளி, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். மேலும் அவர், பிளஸ்-2 படிக்கும் தனது மகளை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்துள்ளார். அப்போது குடிபோதையில் தெரியாமல் செய்துவிட்டதாக கூறிய அவர், பின்னர் தொடர்ந்து தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி விடுதியில் சேர்க்கப்பட்டதால், ஆத்திரமடைந்த தொழிலாளி தனது மனைவியை கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் தனது மற்றொரு மகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தார்.
Related Tags :
Next Story