விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குரும்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உண்டு. இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் சிந்துஜாவுக்கு (வயது 30) விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வயிற்று வலி என்று படுத்திருந்த சிந்துஜாவை, அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிந்துஜா வீட்டின் குளியலறைக்கு சென்று பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். பின்னர் வாந்தி எடுத்த சிந்துஜாவை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்துஜா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story