தர்மபுரி மாவட்டத்தில் 80 இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தர்மபுரி மாவட்டத்தில் 80 இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி  முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Nov 2021 6:56 AM IST (Updated: 9 Nov 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 80 இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. பாடி கிராமத்தில் நடந்த முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 80 இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. பாடி கிராமத்தில் நடந்த முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
கோமாரி நோய் தடுப்பூசி
தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 871 பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் 80 இடங்களில் நேற்று நடந்தது. பாடியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 
இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், துணை இயக்குனர் டாக்டர் வேடியப்பன், உதவி இயக்குனர்கள் சண்முகசுந்தரம், மணிமாறன், முன்னாள் வீட்டுவசதி சங்க இயக்குனர் பொன் மகேஸ்வரன், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மொரப்பூர்
இந்த முகாம்கள் மூலமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இந்த முகாம்களில் விடுபட்ட கால்நடைகளுக்கு வரும் 29-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொரப்பூர் அருகே உள்ள ஓபிளிநாயக்கன்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரூர் கால்நடை துறை உதவி இயக்குனர் டாக்டர் வில்வம் முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை டாக்டர் வெற்றிவேல், ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மொரப்பூர், தொப்பம்பட்டி, தாசரஅள்ளி, கொசப்பட்டி  ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Next Story