சென்னையில் விமானங்கள் இயக்கம்: பயணிகள் தாமதம் இன்றி விமான நிலையம் வர வேண்டுகோள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பிறநகரங்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்கள் தாமதம் ஏற்படுகிறது.
மழை காரணமாக வாகனங்கள் கிடைக்காமலும், போக்குவரத்து பாதிப்பாலும் பயணிகள் உரிய நேரத்தில் விமான நிலையம் வர முடியாததால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலைய ஆணையகம் தனது ‘டுவிட்டர்’ பதிவில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வானிலையை கருத்தில் கொண்டு விமான சேவைகள் உரிய நேரத்தில் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள், மழை காலமாக இருப்பதால் உரிய நேரத்துக்கு விமான நிலையம் வரவேண்டும்” என கோரி உள்ளது.
Related Tags :
Next Story