எட்டயபுரம் அருகே உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்


எட்டயபுரம் அருகே உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 9 Nov 2021 4:57 PM IST (Updated: 9 Nov 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்

எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (28). இவர்களுக்கு திருமணமாகி வைத்திஷினி (12) மற்றும் முகாசினி (8) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
மதுபோதையில் துன்புறுத்தல்
கடந்த சில மாதங்களாக மதுபோதையில் வீட்டிற்கு வரும் மாடசாமி, இந்திராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மாடசாமி இந்திராவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இந்திரா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் மாடசாமி சாப்பிட அமர்ந்துள்ளார்.
உணவில் விஷம் கலப்பு 
அவரது உணவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி விஷ மருந்தினை இந்திரா கலந்து வைத்ததாராம்.  சாப்பிட்டு கொண்டிருந்த மாடசாமிக்கு உணவில் மருந்து வாசம் வருவதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது உணவில் விஷ மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் மாடசாமி மயங்கியுள்ளார்.
மனைவி கைது
 அருகிலிருந்தவர்கள் மாடசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.

Next Story