சூரசம்ஹார விழா
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழாநடந்தது.
உடுமல
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹார விழாநடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூரசம்ஹாரம் விழா
உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ம்தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் உள்ள
வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்து வந்தது. கந்தசஷ்டியையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3.15 மணிக்கு சூரசம்ஹாரவிழா கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவையொட்டி பிரசன்ன விநாயகர் மற்றும் விசாலாட்சிஅம்மன் சன்னதிகளில் சிறப்புபூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கி வரும் நிகழ்ச்சி நடந்தது.இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, சப்பரத்தில் எழுந்தருளி கஜமுகாசூரன், பத்மாசூரன், பானுசூரன், சிங்கமுகசூரன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார்.
தரிசனம்
உடுமலையில் சூரசம்ஹாரம் விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நகர முக்கிய வீதிகளில் நடைபெறும்.ஆனால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கடந்த ஆண்டைப்போன்று நேற்று சூரசம்ஹார விழா, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடந்தது.விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் இடம் ஒதுக்கியிருந்தது.
சூரசம்ஹாரம் விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆர்.சீனிவாச சம்பத், தக்கார் வி.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.இன்று
புதன்கிழமைகாலை 10மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
Related Tags :
Next Story