குன்னூர் மவுண்ட் ரோட்டில் விரிசல்


குன்னூர் மவுண்ட் ரோட்டில் விரிசல்
x
தினத்தந்தி 9 Nov 2021 7:36 PM IST (Updated: 9 Nov 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் மவுண்ட் ரோட்டில் விரிசல்

குன்னூர் 

குன்னூர் மவுண்ட் ரோடு அரசு ஆஸ்பத்திரி, வங்கிகள், பெட் போர்டு சர்க்கிள், சிம்ஸ் பூங்கா போன்ற இடங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குன்னூர் பஸ் நிலைய ஆற்றில் கலக்கிறது. தற்போது குன்னூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும்,  மவுண்ட் ரோடு சாலையில் டாக்ஸி நிலையம் அருகில் சாலை ஓரத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து பிளவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தகவலறிந்த நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். 

Next Story