சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
கூடலூர்
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஹரிஷ்குமார் என்பவரின் சுற்றுலா வேனில் 16 பேர் ஊட்டிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். வேனை ஹரிஷ் குமார் ஓட்டினார். பின்னர் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு கூடலூர் வழியாக நேற்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கூடலூர் சில்வர் கிளவுட் வனத்துறை சோதனைச்சாவடியை கடந்த போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு பெங்களூரைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 33), லட்சுமி (36), வனசாட்ஷி (53) உள்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு சென்றனர். விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story