வெவ்வேறு சம்பவங்களில் டீக்கடைக்காரர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் டீக்கடைக்காரர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 55). டீக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 7-ந்தேதி டீக்கடையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபோல ஆண்டிப்பட்டி அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்(50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு அவர் கீழே விழுந்து வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த விஜயன் புதூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story