தூத்துக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது


தூத்துக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம்  நடந்தது
x
தினத்தந்தி 9 Nov 2021 8:44 PM IST (Updated: 9 Nov 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம்  நடந்தது.
கந்தசஷ்டி விழா
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி சன்னதியில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கி நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 7 மணிக்கு கும்பஜெயம், 10.35 மணிக்கு கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை, 12.30 மணிக்கு ஆறுமுக அர்ச்சனை நடந்தது. மாலை 4.35 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கியது.
சூரசம்ஹாரம்
தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்ய புறப்பட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஆலய வளாகத்தில் நடந்தது. முதலில் தாரகாசூரனை முருகபெருமான் வதம் செய்தார். அதன்பிறகு சிங்கமுகா சூரன், சூரபதுமனையும் வதம் செய்து சேவலாக சூரனை முருகபெருமான் ஆட்கொண்டார். பின்னர் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
திருக்கல்யாணம்
இன்று (புதன்கிழமை) காலை 7.15 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 4.25 மணிக்கு சுவாமி காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6.05 மணிக்கு தபசு காட்சி, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சங்கரராமேசுவரர் ஆலய திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 8 மணிக்கு திருமாங்கல்யம் பூட்டுதல், தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி, பட்டின பிரவேசம் நடக்கிறது.

Next Story