தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின்போது 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது


தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின்போது 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது
x
தினத்தந்தி 9 Nov 2021 8:59 PM IST (Updated: 9 Nov 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின்போது 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின்போது 737 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி  பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ருக்மணி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடிகள்
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் பட்டியல் ஏற்கனவே பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. இந்த வாக்குச்சாவடி பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளதா? என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் நடத்தப்பட்டது.  இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி பட்டியலில் 3 ஆட்சேபனைகள் மட்டும் தெரிவித்து இருந்தனர். 
மேற்காணும் வாக்குச் சாவடி பட்டியல்களின் ஆட்சேபனைகள் எழுத்து பூர்வமாக வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சியில் மொத்தம் 737 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 315 அiனைத்து வாக்காளர்களுக்கான வாக்குசாவடி, 211 ஆண் வாக்காளர்களுக்கான வாக்குசாவடி, 211 பெண் வாக்காளர்களுக்கான வாக்குசாவடிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story