தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்தி வருமாறு:-
பன்றிகள் தொல்லை
காரைக்கால் பகுதியில் ஓடுதுறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுஓடுதுறை பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுத்தி திரிகின்றன. இவைகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சில சமயங்களில் பன்றிகள் சாலையில் செல்லும் பெண்கள், சிறுவர் மற்றும் முதியவர்களை துரத்தி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடுஓடுதுறை பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ராஜேஷ், காரைக்கால்.
Related Tags :
Next Story