வியாபாரிகள் குடும்பத்துடன் 2-வது நாளாக போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்கனவே அங்கு கடை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகளை ஒதுக்கித் தர வேண்டும். புதிய வணிக வளாகத்தில் கட்டப்படும் கடைகளில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் நேற்று 2-வது நாளாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.
சங்க மாநகர தலைவர் சாலமோன், தலைவர் அசோகன், செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் சேக்முகமது மற்றும் பெரியபெருமாள் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொட்டும் மழையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story