தாயை தாக்கிய மகன் கைது


தாயை தாக்கிய மகன் கைது
x
தினத்தந்தி 10 Nov 2021 12:22 AM IST (Updated: 10 Nov 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பத்தமடை பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 65). இவருடைய மகன் முத்துக்குமார் (25). இவர் ஒரு பெண்ணை 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் முத்துக்குமார் திருமணம் ஆனதில் இருந்து சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முத்துக்குமார் அவருடைய மனைவியிடம் தகராறு செய்ததை தாய் கஸ்தூரி தட்டிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து முத்துக்குமார், கஸ்தூரியை அவதூறாக பேசி தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Next Story