தொடர் மழையால் சாலை உடைப்பு


தொடர் மழையால் சாலை உடைப்பு
x
தினத்தந்தி 10 Nov 2021 12:29 AM IST (Updated: 10 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே தொடர் மழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை- கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு மின் நகர் அருகே நேற்று சாலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, உள்வாங்கியுள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் விபத்து ஏதும் ஏற்படாத வகையில் சாலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story