சூரசம்ஹாரம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்


சூரசம்ஹாரம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 10 Nov 2021 12:54 AM IST (Updated: 10 Nov 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

சூரசம்ஹாரம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்

சோமரசம்பேட்டை, நவ.10-
திருச்சி அருகே  வயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் கோவிலில் நடைபெறும் பூஜைகள் நடைபெற்றது. எனினும் தொடர் மழை காரணமாக கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story