மழையால் 201 வீடுகள் சேதம்


மழையால் 201 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 10 Nov 2021 1:24 AM IST (Updated: 10 Nov 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

மழையால் 201 வீடுகள் சேதம் அடைந்தன

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆயத்த பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பு கல்லோலிகர், கலெக்டர் கவிதாராமு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், மாவட்டத்தில் 1,183 கண்மாய்கள் நிரம்பியுள்ளது. இதில் 458 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்மாயின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 73 ஆயிரம் எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 58 ஆயிரம் எக்டர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மட்டும் தான் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அவர்களையும் பயிர் காப்பீடு செய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 18.2 எக்ேடர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏரி மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக கடலோர காவல் படையினர் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் 457 பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழையால் இதுவரை 122 வீடுகள், 79 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 79 கால்நடைகள் இறந்துள்ளன என்றார்.


Next Story