வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 10 Nov 2021 1:29 AM IST (Updated: 10 Nov 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

புதுக்கோட்டை
மணமேல்குடியில் மளிகை கடை நடத்தி வருபவர் முகமது ராவுத்தர் (வயது 52). இவர் 9 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ராவுத்தரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். இதில் முகமது ராவுத்தருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முகமது ராவுத்தரை தஞ்சாவூர் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.


Next Story