ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது


ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2021 1:54 AM IST (Updated: 10 Nov 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது

சங்ககிரி, நவ.10-
சங்ககிரியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையடிக்க முயற்சி
சங்ககிரி மையப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி இரவு 1.30 மணியளவில் மர்மநபர்கள் முகமூடி அணிந்து புகுந்தனர். பின்னர் அவர்கள் வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர். 
அப்போது அந்த வழியாக பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளையர்கள் பாதியிலேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கியாஸ் வெல்டிங் மிஷின், ஸ்பிரே பெயிண்டு உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து காரில் வந்த 3 பேரையும் பிடித்துவிசாரித்தனர். 
இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபாலன் (வயது 24), ஜெகதீஷ் (26), முகமது ரியாஸ் (19) என்பதும், இவர்கள் தான் சங்ககிரியில் ஏ.டி.எம்.மையத்தில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைதுசெய்தனர். 
8 வங்கிகளின் ஏ.டி.எம்.
ைகதான பூபாலன் கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு பகுதியில் 8 வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 74 ஆயிரத்து 400 கொள்ளையடித்ததும், போலீசில் சிக்காமல் இருக்க புதுச்சேரி, ஐதராபாத், பெங்களூரு மற்றும் கேரளாவில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story