சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்


சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 10 Nov 2021 1:54 AM IST (Updated: 10 Nov 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

சேலம், நவ.10-
சேலத்தில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி விழா
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தீபாவளி அன்று கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகன் கோவில்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி காலை முதலே சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
சேலம் அம்மாபேட்டை குமரகிரி பால தண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று சாமிக்கு பால் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் கந்தசஷ்டி பாராயணம் படித்து சாமியை வழிபட்டனர். பின்னர் மாலை சூரசம்ஹாரம் நடந்தது.
சூரசம்ஹாரம்
சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கடந்த 4-ந் தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதாபூஜையுடன் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், 36 தடவை சஷ்டி பாராயணம், சங்காபிஷேகம் லட்சார்ச்சனை நடந்தது. காவடி பழனியாண்டவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி ஆட்டு கிடா வாகனத்தில் காவடி பழனியாண்டவர் எழுந்தருளி சூரனை வதம் செய்தார். இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சுப்ரபாதத்துடன் நடைதிறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
சாமி தரிசனம்
இதேபோல் சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடையப்பன் முருகன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story