நெருக்கமாக இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு
நெருக்கமாக இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பெண்ணிடம் நகை,பணம் பறித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 23 வயது பெண்மணி, தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அப்போது, அங்கு பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஜீவரத்தினம் (வயது 38) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்தநிலையில், தன்னிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி, ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணம், 22 பவுன் நகையை ஜீவரத்தினம் பறித்துவிட்டார். தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூளைமேடு போலீசில் அந்த பெண் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் ஜீவரத்தினத்தின் மனைவி சங்கீதாவுக்கும் (32) தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.
அதன்பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஜீவரத்தினம், அவரது மனைவி சங்கீதா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story