திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குனர் அசோகன் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக மழைநீர் செல்ல வழி இல்லாமல் கால்வாய்களில் தேங்கி இருந்தது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி சார்பில் திருவள்ளூர், ஈக்காடு பகுதிகளில் மழைநீர் செல்ல கால்வாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதேபோல திருவள்ளூர் பெரியகுப்பம் கம்பர் தெருவிலும் மழைநீர் வடிகால்வாய் சீரமைத்து மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மேற்கண்ட இந்த 2 பணிகளையும் நேற்று நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் அசோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி பொறியாளர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story