கயத்தாறு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்


கயத்தாறு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி  தற்கொலை செய்து கொண்டார்
x
தினத்தந்தி 10 Nov 2021 7:55 PM IST (Updated: 10 Nov 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

கயத்தாறு:
கயத்தாறு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி  தற்கொலை செய்து கொண்டார்.
உடல்நிலை பாதிப்பு
கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் முருகன் (வயது 49). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவர் அடிக்கடி மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர்  நேற்று முன்தினம் இரவு வீட்டில் மதுவுடன் மருந்தையும்
சேர்த்து கலந்து குடித்துள்ளார். 
போலீசார் விசாரணை
சிறிது நேரத்தில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ்அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story